மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் பேசிய பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!
செல்போன்கள் என்பது நம்மிடையே தவிர்க்க முடியாத பொருளாகிவிட்டது. சிறியவர்கள் முதல்வர் பெரியவர்கள் வரை என செல்போனுக்கு அடிமையாக மாறி, எந்த நேரமும் அதனை வைத்து உபயோகம் செய்தவாறு நிலைமை மாறிவிட்டது. சாலைகளில் நடக்கும் போது கூட தலைமிர்ந்து செல்லாமல், செல்போனை கண்ணில் பார்த்தவாறு அலட்சியமாக பயணம் செய்து வருகிறோம்.
இன்னும் சிலர் எந்த நேரமும் செல்போனும் கையுமாக இருந்து, சார்ஜ் போடும் போது கூட அதனை உபயோகம் செய்து வருகிறோம். சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனை உபயோகம் செய்வது அல்லது மற்றொரு நபருக்கு தொடர்பு கொண்டு பேசுவதால், செல்போன் வெடிக்கும் அபாயம் உள்ளது என்பது பலரும் அறிந்த ஒன்று.
ஆனால், அலட்சியமாக காரணமாக அவை எளிதாக நடந்து வருகிறது. பெண்மணியொருவர் செல்போனில் சார்ஜ் போட்டவாறு பேசிக்கொண்டு இருந்த நிலையில், குடும்ப உறுப்பினர்கள் அவரை கண்டித்தும் கேட்டுக்கொள்ளாமல் செயல்பட்ட நிலையில், இறுதியில் செல்போன் தீப்பற்றி இருந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணியின் காதுகளில் காயம் ஏற்பட, அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.