#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆட்டோவின் மீது விழுந்த இரும்பு கம்பியால் பரிதாபம்!!. தாயும் மகளும் பலியான சோகம்..!
மகாராஷ்டிர மாநிலம், மும்பை பிரதாப் நகர் பகுதியை சேர்ந்தவர் ஷமா ஆஷிப் சேக் ( 28). இவரது மகள் அயத் ஆஷிப் சேக் (9). இவர்கள் இருவரும் நேற்று மாலை 6 மணியளவில் ஜோகேஸ்வரி மேற்கு விரைவு சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அந்த சாலையில் இயங்கிவரும் சால்யக் மருத்துவமனை அருகே வந்த போது அங்கு கட்டப்பட்டுவரும் 14 மாடி கட்டிடத்தில் இருந்து கனமான இரும்பு பைப் ஒன்று ஆட்டோ மீது விழுந்தது.
எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் ஆட்டோ சேதமடைந்ததுடன், அதில் பயணம் செய்த தாய் மற்றும் மகளின் தலையில் பலமாக தாக்கியது. இதில் அவர்கள் இருவரும் பலத்த காயமடைந்ததுடன், ரத்த வெள்ளத்தில் துடித்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தோர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதற்கிடையே, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஷமா ஆஷிப் சேக் பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிய சிறுமி அயத் ஆஷிப் சேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து கூறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்துக்கு காரணமான, கட்டுமான நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த இரும்பு கம்பி தாக்கி தாய், மகள் பலியான சம்பவம் மும்பையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.