மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மகளை கொலை செய்த கொடூரத் தாய்.!
ஆந்திர மாநிலத்திலுள்ள ஆனந்தபூர் மாவட்டத்தின் கொட்டங்கா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் கோமளா வயது 17 என்ற சிறுமிக்கு அவருடைய பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்து, மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். ஆனால் கோமளாவோ, 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் எனக்கு ஏன் இவ்வளவு அவசரமாக திருமணம் செய்ய முடிவெடுத்தீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால், ஆத்திரம் கொண்ட கோமளாவின் பெற்றோர் கோமளாவை கடுமையாக வசைப்பாடி, அவரை அடித்துள்ளனர். ஆனாலும் கோமளா தனக்கு திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை என்பதில் உறுதியாகயிருந்தார். இத்தகைய சூழ்நிலையில்தான், கடந்த 8ம் தேதி கோமளாவை பெண் பார்ப்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் வந்ததாக தெரிகிறது.
அப்போது மாப்பிள்ளை வீட்டார் முன்னிலையில் சிறுமி கோமளா தனக்கு திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை என்று கூறியிருக்கிறார். இதனால் பிரச்சனை பெரிதாகியிருக்கிறது. ஆகவே கோமளாவின் தாய் , நாங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வேறு யாரோ ஒருவருடன் ஓடிப்போக முடிவு செய்து விட்டாயா? என்று வசைப்பாடி அடித்ததாக சொல்லப்படுகிறது.
மகளை அடித்த பின்னரும் கோபம் குறையாத கோமளாவின் தாய் சமையலறையிலிருந்து கத்தியை எடுத்து வந்து, பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் கோமளாவின் வயிற்றில் சரமாரியாக குத்தியிருக்கிறார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கோமளா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கோமளாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, சிறுமியின் தாயை அதிரடியாக கைது செய்தனர்.