திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
+2 மாணவிக்கு தொடர் பாலியல் சில்மிஷம்... போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர்.. அதிர்ச்சி ரிப்போர்ட்.!
புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு தொடர்பாலியல் தொல்லை கொடுத்து வந்த தனியார் பள்ளியின் தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்..
புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் பகுதியிலுள்ள தொண்டமாதத்தம் என்ற இடத்தில் ஜெயபால கோகுலம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியின் தாளாளராக இருந்து வருபவர் குமரன் (45), இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் இரவு எட்டு மணி வரை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் பயின்று வரும் பிளஸ் டூ மாணவி ஒருவருக்கு சிறப்பு வகுப்புகளின் போது தாளாளர் குமரன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும் இதனை வெளியே சொன்னால் செய்முறை தேர்வுகளில் மதிப்பெண்களை குறைத்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார் . இந்நிலையில் அவரது பாலியல் தொல்லை எல்லை கடந்து சென்றதால் பொறுத்துக் கொள்ள முடியாத மாணவி இது தொடர்பாக தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் வில்லியனூர் காவல் நிலையத்தில் பள்ளியின் தாளாளர் குமரனுக்கு எதிராக புகாரளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த வில்லியனூர் ஆய்வாளர் வேலய்யன் பள்ளியின் தாளாளர் குமரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.