கிராம மக்களை விரட்டித்தாக்கி இரத்தம் பார்க்கும் ஒற்றை காகம்.. காரணம் என்ன?..!



a Single Crow Attacks Villagers Incident at Karnataka Chitradurga Obalapura

கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா, மரமசாகரா ஓப்லாப்புரா கிராமத்தில், காகம் ஒன்று கிராம மக்களை விரட்டி தாக்கும் நிகழ்வு நடந்து வருகிறது. நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், வீதிகளில் விளையாடும் சிறுவர்கள் என பாரபட்சமின்றி மனிதர்களை கொத்தி வருகிறது. 

இதனால் பாதிக்கப்படும் பொதுமக்களின் முகம், தலை உட்பட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காகத்தை பிடிக்க கிராம மக்கள் எடுத்த முயற்சியும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் காக்கைக்கு பயந்து மக்கள் துண்டை கட்டிக்கொண்டு வெளியே சென்று வருகின்றனர். 

karnataka

காகத்தின் தாக்குதல் சம்பவம் கடந்த 6 மாதமாக நடந்து வருவதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர். ஊரின் எல்லைப்பகுதியில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் பல்வேறு காரணத்தால் குடமுழுக்கு நடத்தப்படாமல் இருக்கும் நிலையில், ஆதலால் காகம் மனிதர்களை தாக்கலாம் என்றும் ஊரின் பெரியோர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனால் விரைவில் ஆஞ்சநேயர் கோவிலில் திருவிழா நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிராம மக்கள் வீட்டினை விட்டு வெளியேற இயலாமலும் தவித்து முடங்கியுள்ளனர்.