#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஏலேய்.. செருப்பை வாயில் கவ்விக்கொண்டு ஓட்டமெடுத்த பாம்பு.. வைரல் வீடியோ காட்சிகள்..!
பாம்பு ஒன்று செருப்பை வாயில் கவ்விக்கொண்டு ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி. ஏனெனில் பாம்பின் நஞ்சையும், அதன் ஆக்ரோசத்தையும் கண்டு அஞ்சாத ஆட்களே இல்லை. அவைகளின் வாழ்விடங்கள் மீது இன்று நாம் குடியிருந்து வருவதால், அவ்வப்போது அவை தனது வாழ்விடத்தை வந்து பார்த்துவிட்டு செல்லும்.
விபரம் தெரிந்தவர்கள் பாம்புகளை கண்டால் அதனை பக்குவமாக அங்கிருந்து விரட்டிவிட்டு தங்களின் வழியில் தொடர்ந்து பயணம் செய்வார்கள். இந்நிலையில், பாம்பை செருப்பால் அடிக்க, அது செருப்பை தூக்கிக்கொண்டு ஓடிய சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைராகியுள்ளது.
அந்த வீடியோவில், "பாம்பு ஒன்று தெருவின் வழியே எங்கு செல்வது என்று தெரியாமல் வீட்டிற்குள் நுழைய முயற்சிக்கிறது. இதனைக்கண்ட குடும்பத்தினர் ரப்பர் செருப்பை எடுத்து பாம்பின் மீது எரிந்து விரட்டுகின்றனர். அதனால் ஆக்ரோஷமாகும் பாம்பு ரப்பர் செருப்பை கடிக்க, அது அதன் பல்லிலேயே சிக்கிக்கொண்டுள்ளது.
ஏற்கனவே பதற்றம், கோபத்துடன் இருந்த பாம்பு அங்கிருந்து விரைந்து செல்ல, அதன் பற்களில் இருந்து செருப்பு விழாத காரணத்தால் அதனை தன்னுடன் எடுத்து செல்கிறது". இந்த விடியோவை பார்த்த பலரும் பாம்பு செருப்பை களவாடி செல்வதாக வைரலாகி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்தது நல்லபாம்பு என்பது குறிப்பிடத்தக்கது.