மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேலைக்காரரின் பிறப்புறுப்பை அறுத்து பையில் போட்டு காவல் நிலையம் சென்ற இளம் பெண்.. பரபரப்பு சம்பவம்..!
உத்திரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார்.இவரது கணவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் காவல் நிலையத்திற்கு பரபரப்பாக ஓடிவந்துள்ளார்.
இதனையடுத்து அந்தப் பெண் அங்கிருந்த காவலர்களிடம் தான் கொண்டு வந்த பையை காண்பிக்க அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் அந்தப் பையில் இருந்தது நபர் ஒருவரின் ஆணுறுப்பு. இதனை தொடர்ந்து அந்தப் பெண் காவலர்களிடம் கூறியதாவது எனது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டு வேலைகளை செய்வதற்காக வாலிபர் ஒருவரை பணியமர்த்தினோம். ஆனால் அந்த வாலிபர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் என்னை பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த வாலிபரின் ஆணுறுப்பை அறுத்து விட்டதாக போலீசிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு ரத்த காயங்களுடன் இருந்த வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் போலீசார் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் சிறுவயதிலிருந்தே வாலிபர் அந்த வீட்டில் வேலை செய்து வருவதாகவும் சம்பவத்தன்று அந்த பெண் மயக்க மருந்து கொடுத்து வாலிபரை மயக்கம் அடைய செய்து ஆணுறுப்பை அறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அந்த வாலிபரின் தந்தை அளித்த புகாரின் பேரில் அந்த இளம் பெண்ணை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.