மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேசப்பற்றுடன் ஆவின் நெகழ்ச்சி செயல்.. மூவர்ணக் கொடி நேரத்தில் குல்பி தயாரிப்பு..!
இந்தியா சுதந்திரமடைந்து கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் இன்று இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இதனை சிறப்பாக கொண்டாட மத்திய அரசும், மாநில அரசும் தயாராகியிருக்கிறது.
சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு இந்தியர்களின் வீட்டிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. அவரவர்களின் வசதிக்கு ஏற்ப சிறிய அளவு மற்றும் பெரிய அளவு என கொடிக்கம்பம் நட்டு மக்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று சுதந்திர தினம் என்பதால் மூவர்ணநிற குல்பியை அறிமுகம் செய்கிறது ஆவின் நிறுவனம். தேசிய கொடியின் நிறத்தில் ஆவின் நிறுவனம் இன்று குல்பி விநியோகிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.