பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இராணுவத்தினரின் குடும்பங்களுக்காக பிரபல நடிகர் நிதி உதவி!



actor-vijay-devarkonda-donates-for-killed-martyrs

ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் அணிவகுத்து சென்று கொண்டிருந்த இராணுவ வீரர்களின் வாகனத்தில் பயங்கரவாதி ஒருவன் சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்களில் ஒன்றை குறிவைத்து வேகமாக மோதினான். அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின. அதில் அந்த பஸ் முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன.  இதில் துணை ராணுவ படையினர் 44 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றனர்.

Kashmir attack

இதனை தொடர்ந்து உயிரிழந்த துணை இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான விஜய் தேவர் கொண்டா அரசின் bravehearts திட்டத்திற்கு தன்னால் முடிந்த உதவியை நிதி உதவி செய்துள்ளார். மேலும் மற்றவர்களும் இதே போல் முன்வந்து வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராணுவ வீரர்கள் நமது குடும்பத்தை பாதுகாத்து வருகின்றனர். நாம் கண்டிப்பாக அவர்களது குடும்பங்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். அவர்களின் உயிருக்கு இணையாக நம்மால் எதையும் செய்ய முடியாது. ஆனால் அவர்களது குடும்பங்களுக்கு நம்மால் இயன்ற சிறு உதவியாவது செய்ய வேண்டும். எனவே அனைவரும் உங்களால் முயன்ற நிதி உதவி செய்யுங்கள்" என பதிவிட்டுள்ளார்.