சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
அக்காவை அடித்து கொடுமைப்படுத்திய கணவர்.! தட்டி கேட்க சென்ற தம்பிக்கு நிகழ்ந்த சோகம்..!

அகமதாபாத் ஃபதேவாடி பகுதியை சேர்ந்தவர் இம்ரான்-சமீனபானு தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சமீனபானு - இம்ரான் தம்பதியினர் திருமனமாகி மூன்று ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
ஆனால் அதன்பிறகு இம்ரான் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வது, மனைவியை துன்புறுத்துவது, வீட்டு செலவிற்கு பணம் கொடுக்காமல் இருப்பது போன்ற செயல்களை செய்து வந்ததுடன், மற்ற பெண்களுடன் தொடர்பிலும் இருந்து வந்துள்ளார்.
இம்ரான் செய்த அனைத்து கொடுமைகளையும் தனது தாய் வீட்டிற்கு தெரியாமல் மறைத்து வந்த சமீனபானு. ஒரு கட்டத்தில் பொருமை இழந்து தனது தாய் வீட்டிற்கு சென்று நடந்த அனைத்தையும் தனது தம்பியிடம் கூறியுள்ளார் சமீனபானு.
அதனை அடுத்து இம்ரான், சமீனபானு வீட்டிற்கே சென்று மனைவியுடன் தகராறு செய்துள்ளார். சண்டையை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்ய வந்த சமீனபானுவின் தம்பியை அவரது வயிற்றில் ஒரு ஸ்க்ரூட்ரைவர் மூலம் குத்தியுள்ளார் இம்ரான்.
அதனை அடுத்து சமீனபானுவின் தம்பியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சமீனபானுவின் தம்பி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.