மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சட்டமேதை அம்பேத்கரை உயிருடன் கண்முன் நிறுத்திய சிற்பிக்குழு: ஜெய்பூர் மெழுகுசிலை அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை.!
சட்டமேதை, தாழ்த்தப்பட்ட மக்களின் விடியல் என பல புனைப் பெயர்களால் போற்றப்பட்டு, ஆண்டுகள் கடந்து மக்களின் மனதில் வாழ்ந்து வருபவர் பாபா சாகேப் அம்பேத்கர். இந்நிலையில், அம்பேத்காரின் மெழுகுசிலை இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர், நகர்கர்ஹ் பகுதியில் உள்ள ஜெய்பூர் மெழுகு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெழுகு அருங்காட்சியகத்தின் நிறுவனர் அனூப் ஸ்ரீவஸ்தவா தெரிவிக்கையில், நாங்கள் சுற்றுலாப்பயணிகளை கவர பல்வேறு வகையான மெழுகு சிலைகள் வைத்துள்ளோம். அதனை இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளை திரளாக வந்து கண்டு செல்கிறார்கள்.
அவ்வாறாக வரும் இந்தியர்கள் பலரும் சட்டமேதை பாபா சாகேப் அம்பேத்கரின் மெழுகுசிலை கேட்டு கோரிக்கை வைத்தனர். அவரின் நினைவு நாள் அன்று மெழுகு சிலை வைக்க நாங்கள் ஏற்பாடு செய்தோம். அதன்படி மெழுகு சிலையை தயாரித்து நாங்கள் வைத்துள்ளோம்.
இளைஞர்களிடம் இருந்து சட்டமேதைக்கான வரவேற்பு கிடைப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒவ்வொருவரும் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டு, அவரவர் வேலைகளை செய்து நிம்மதியான வாழ்க்கையை வாழவேண்டும். பிறப்பால் வரும் ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டிய விஷயங்களில் ஒன்று" என கூறினார்.
தற்போது அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை 5 அடி 11 இன்ச் உயரத்துடன், 38 கிலோ எடையுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. மெழுகுசிலை அருங்காட்சியகத்தில், இந்தியாவை சேர்ந்த 47 பிரபலங்களின் மெழுகு சிலை இருப்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த சட்டமேதையை மெழுகு சிலை வாயிலாக தத்ரூபமாக சிற்பிக்குழு வடிவமைத்துள்ளது.