மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடுரோட்டில் திடுக்... காதலை ஏற்க மறுத்த இளம் பெண்... துரத்தி துரத்தி வெட்டு... மடக்கிப் பிடித்த பொதுமக்கள் கொடுத்த தர்ம அடி.!
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் காதலை ஏற்க மறுத்த காதலியை ரோட்டில் துரத்தி வெட்ட முயன்ற காதலனை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் சதாசிவ பேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலிப்பதாக கூறி கடந்த மூன்று நாட்களாக தொந்தரவு செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் அந்தப் பெண் விடாப்பிடியாக இவரது காதலை நிராகரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தன்னுடைய காதலை ஏற்க மறுத்த அந்த பெண்ணை கொலை செய்வதற்காக கையில் கத்தியுடன் ரோட்டில் துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும் காயம் அடைந்த அந்த பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக அந்த நபர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.