பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
கள்ளக்காதல் கொண்ட கணவன்... ஆட்டை அறுப்பது போல, தலையை துண்டித்து இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட மனைவி.!

முறையற்ற உறவு வைத்திருந்த கணவனை, மனைவி தலையை துண்டித்து கொலை செய்ய சம்பவம் ஆந்திராவில் அடைந்துள்ளது.
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள குண்டூர், நரசராவ்பேட்டையை சேர்ந்தவர் ரவிச்சந்திரா (வயது 53). இவர் வியாபாரியாக இருந்து வருகிறார். திருப்பதியை அடுத்துள்ள திருச்சானூர் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடையை நடத்தி வருகிறார். இவரின் மனைவி வசுந்தரா (வயது 50).
வசுந்தராவின் சொந்த ஊர் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கித்தலூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர்களுக்கு 20 வயதில் மகன் உள்ள நிலையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டார் ஆவார். இவர்கள் அனைவரும் குடும்பத்தோடு ரேணிகுண்டாவில் வசித்து வருகின்றனர். ரவிச்சந்திராவுக்கும் - மற்றொரு பெண்மணிக்கும் கள்ளக்காதல் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இதனால் கடந்த சில நாட்களாக ரவிச்சந்திரா - வசுந்தரா இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்றும் வழக்கம்போல தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வசுந்தரா சமயலறையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து, ரவிச்சந்திராவின் கழுத்தை ஆட்டை அறுப்பது போல தனியே துண்டித்து, பிளாஸ்டிக் கவரில் வைத்து இரத்த கரையுடன் ரேணிகுண்டா காவல் நிலையத்திற்கு சென்றார்.
அங்கு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து சரணடைந்த நிலையில், முதற்கட்ட விசாரணை நடத்திய காவல் துறையினர் ரவிச்சந்திராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தியும் வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.