கூட்டணி என்றால் ஒன் சைடு லவ்வா?... சந்திரபாபு நாயுடு பரபரப்பு பேட்டி.!



Andra Telegu Desam Party ChandraBabu Naidu Pressmeet

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2019 லோக்சபா தேர்தல், சட்டப்பேரவை தாதலுக்கு முன்னதாக அம்மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜனசேனாவுடன் கூட்டணியை முறித்தது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் படுதோல்வியடைந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி அடைந்து ஆட்சியை கைப்பற்றியது. ஜெகன்மோகன்ரெட்டி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். 

இந்த நிலையில், வரும் 2024 ஆம் வருடம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மற்றும் ஜனசேனா கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. தெலுங்கு தேசத்தின் கடந்த கால செயல்பாடுகள் காரணமாக, அந்த கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என பாஜக தலைவர்கள் நினைத்து வருகின்றனர். 

ஆனால், சந்திரபாபுவுக்கு நெருக்கமாக இருக்கும் பாஜக எம்.பி ஒய்.எஸ் சவுதாரி, சி,எம் ரமேஷ் ஆகியோர் கூட்டணி புதுப்பிக்க மேலிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இன்று செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, "என்னைப்பொறுத்தவரையில் கூட்டணியை தேர்தலின் வெற்றி மட்டும் முடிவு செய்வது இல்லை. ஆந்திர மக்களின் நலன் அடிப்படையில் கூட்டணியானது முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது, அழிவு ஆட்சியில் இருந்து ஆந்திராவை காப்பாற்ற பெரிய கூட்டணி தேவை. பாஜக உட்பட பிற கட்சிகளுடனான கூட்டணி குறித்து தகவல் ஏதும் உண்மை கிடையாது. கூட்டணி என்பது ஒருதலைக்காதலாக இருக்க இயலாது" என்று தெரிவித்தார்.