#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காவல் நிலையத்தில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற காவலர்; விசாரணை பெயரில் பகீர் சம்பவம்.!
அசாம் மாநிலத்தில் உள்ள கோக்ராபர் காவல் நிலையத்தில், ஜூன் 21ம் தேதி சிறுமி மயமாகி இருக்கிறார். அவரை கண்டறிந்து தரக்கூறி சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் உதவி ஆய்வாளர் பீமன் ராய், காதலனுடன் ஓடிப்போன சிறுமியை கண்டறிந்து விசாரணைக்கு என காவல் நிலையம் அழைத்து வந்துள்ளார்.
அங்கு சிறுமியை தனது அறைக்கு விசாரணை என அழைத்து சென்று, காவலர் தனது ஆடைகளை கலைந்து சிறுமியை பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்தி முயற்சித்து இருக்கிறார்.
சிறுமி அங்கிருந்து தப்பி வந்துவிட, உயர் அதிகாரிகளிடம் புகார் வழங்கி விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணையில் எஸ்.ஐ பீமன் ராயின் மீதான குற்றசாட்டு உறுதியாகவே, அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.