திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பல ஆண்டுகள் தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தை.! நன்றிகடன் செலுத்த கோவிலுக்கு சென்றபோதுநேர்ந்த விபரீதம்.!
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம், லால்பேட் கிராமத்தில் வசித்து வருபவர் அமித்ஷா. 36 வயது நிறைந்த இவர் கார் ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி பிரியங்கா. இவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் அவர்கள் பல கோயில்களுக்கு ஏறி இறங்கிய நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
இதனால் மிகுந்த சந்தோஷத்தில் இருந்த அந்த தம்பதியினர் சமீபத்தில் குழந்தையுடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் பைசாபாத் விரைவு ரயிலில் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் அதிகாலை குழந்தை பசியால் அழுதுகொண்டே இருந்துள்ளது. இந்நிலையில் பிரியங்கா குழந்தையை தூக்கி பால் புகட்டியுள்ளார். பின்னர் குழந்தை அமைதியான நிலையில் பிரியங்கா தூங்கிவிட்டார்.
அதனைத்தொடர்ந்து ரயில் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வந்தபோது, குழந்தை எந்த அசைவும் இன்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரியங்கா தம்பதியினர் அங்குள்ள மருத்துவர்களிடம் குழந்தையை காட்டியுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இதனை கேட்டதும் அமித்ஷா மற்றும் பிரியங்கா இருவரும் கதறி துடித்துள்ளனர்.
பின்னர் குழந்தையின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் கும்பகோணம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இவ்வாறு குழந்தை பிறந்த சந்தோஷத்தில் கோவிலுக்கு சென்ற தம்பதியினர் குழந்தையை பறிகொடுத்து திரும்பிய சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.