தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கடன்களுக்கான மாத தவணைகளை செலுத்த அவகாசம்! ரிசர்வ் வங்கி!
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசும், அணைத்து மாநில அரசுகளும் தீவிர முயற்சி எடுத்துவருகிறது.
கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுதைத் தடுக்கும் முயற்சியில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகிறது. இதனால் ஏராளமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வர்த்தகம், தொழில், நிறுவனங்களின் பரிவர்த்தனை முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடன்களுக்கான மாத தவணைகளை செலுத்த 3 மாதங்கள் அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தனிநபர்கள், பொது நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான தவணைகளைச் செலுத்த 3 மாதங்கள் வரை வங்கிகள் கால அவகாசம் அளிக்கலாம். வங்கிக் கடன் நிலுவைகளுக்கு 3 மாதம் கழித்து தவணை செலுத்த வங்கிகள் அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.