புளோரைடு குடிநீரால் பற்கள் பிரச்சனையால் அவதிப்படும் கிராமம்.. பகீர் தகவலால் பேரதிர்ச்சி.!



Bihar Villagers Affected Teeth Problem Drinks Fluoride Mixing Water

பொதுமக்கள் குடிக்கும் நீரில் புளோரைடு அதிகளவு இருப்பது தெரியாமல், தாக்கத்திற்கும் - உணவுக்கும் பயன்படுத்தி வந்த நீர் மக்களுக்கு பற்கள் சார்ந்த பிரச்சனையை ஏற்படுத்திய பகீர் சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள போத்கயா மாவட்டம், பாசதி பஞ்சாயத்தில் கோர் பிகா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள், கடந்த சில மாதமாக பற்கள் சார்ந்த பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளனர். 

முதலில் இதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலையில், அடுத்தடுத்து கிராமத்தில் பலரும் பாதிக்கப்பட்டதால் விஷயம் விஷ்வாஓப்பம் எடுத்துள்ளது. இதனையடுத்து, தகவலை கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் எம். சமதர்ஷிக்கு தெரியப்படுத்தியுள்ளார். 

Bihar

அவர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பிரச்சனை குறித்து கடிதம் எழுதியுள்ளார். இதனால் அரசு சார்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தண்ணீரில் அதிகளவு புளோரைடு கலந்து இருப்பதாகவும், அதனாலேயே மக்களுக்கு பற்கள் சார்ந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.