காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
"என் டீசி-யவா தரமாட்டேன்னு சொன்ன?".. ஆத்திரத்தில் உடலில் தீ வைத்து கல்லூரி முதல்வரை கட்டிப்பிடித்த மாணவன்..! அடுத்து நடந்த பகீர் சம்பவம்..!!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் அடுத்த ராமனந்தபூரில் நாராயணா கல்வி குழுமத்திற்கு சொந்தமான ஜூனியர் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர் நாராயணசாமி, தனது மாற்று சான்றிதழை கேட்டு கல்லூரி முதல்வர் சுதாகரை சந்தித்தார்.
அப்போது 'கல்விகட்டணம் பாக்கி இருப்பதாகவும் முழுமையான கட்டணம் செலுத்தினால் தான் மாற்றுச்சான்றிதழை தருவேன்' என்று கல்லூரி முதல்வர் சுதாகர் கூறியுள்ளார்.
தனது கல்வி கட்டணத்தை செலுத்த இயலாத நிலையில், கையில் பெட்ரோலுடன் கல்லூரி முதல்வரின் அறைக்கு சென்ற மாணவர் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு சுதாகரை கட்டிப்பிடித்துக்கொண்டார்.
இதனால் கல்லூரி முதல்வர் சத்தமிடவே, ஓடிவந்த ஆசிரியர்கள் இருவரின் மீதும் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தனர். சுதாகரின் மேல்சட்டை முழுவதும் தீயில் எரிந்து கருகியதால் வெந்தபுண்ணுடன் அவர் சிகிச்சைக்காக ஆட்டோவில் புறப்பட்டுள்ளார்.
இதன்பின் அவரை காப்பாற்ற சென்ற ஆசிரியர் ஒருவருடன் சேர்த்து மூன்று பேரையும் சிகிச்சைக்காக மருத்துவ ஊர்தியில் ஏற்றி, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் இத்தனை களைபரங்களையும் நடத்திய மாணவன் தனது கையில் செல்போனை வைத்துக்கொண்டு உறவினருக்கு தகவல் அளித்துள்ளான்.
கல்லூரி முதல்வர் கருகிய நிலையில் படுத்திருந்ததை கண்ட மாணவன், "தனது டீசியை ஒழுங்கா கொடுத்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது" என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.