மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டயர் வெடித்து தறிகெட்டு ஓடிய கார்... எதிரில் வந்த லாரி மீது மோதி கோரவிபத்து... 3பேர் உடல்கருகி உயிரிழப்பு..!
காரின் டயர் வெடித்ததால், எதிரே வந்த லாரி மீது மோதி காரில் பயணம் செய்த மூவரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
திருப்பதி அடுத்த பக்ராபேட்டை பகுதியில் வசித்து வந்தவர்கள் இம்ரான் மற்றும் ரவூரி தேஜா, சகிரி பாலாஜி. இவர்கள் ஸ்ரீசைலம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கார் திப்பைப்பாலம் அருகே சென்ற நிலையில், எதிர்பாராதவிதமாக காரின் டயர் வெடித்து எதிர்ப்பக்கமாக வந்த லாரி மீது வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் டீசல் டேங்கரில் தீப்பிடித்து கார் முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது.
இதனால் கார் ஓட்டுநர் ரவூரி தேஜா, பதான் இம்ரான் கான், சகிரி பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
பின் சக வாகன ஓட்டிகள் இது குறித்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.