#Breaking: தபால் சேமிப்பு கணக்கிலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை.. மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு.!



Central Govt Announce Post Office Savings Account Online Transaction

பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022 - 2023 பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இதில் பல்வேறு அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. 

அதன்படி, மத்திய அமைச்சர் உரையாற்றுகையில், "5 நதிநீர் இணைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். தமன் கங்கா - பிச்சார், பார்தாபி - நர்மதா, கோதாவரி - கிருஷ்ணா, கிருஷ்ணா - பெண்ணாறு, பெண்ணாறு - காவேரி நதிகள் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மாநில அரசுகள் நதிநீர் இணைப்புக்கு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில், மத்திய அரசு அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். 

Budget Session

டிஜிட்டல் பணபரிவர்தனைக்கு மத்திய அரசு ஊக்கமளித்து வருகிறது. அதனை உறுதி செய்யும் பொருட்டு, தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள், இணையவழியில் பணப்பரிவர்த்தனை செய்வதை உறுதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இனி தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தாலும், அவர்கள் பிற தபால் நிலைய சேமிப்பு கணக்குகளுக்கும், வங்கிக்கணக்குகளுக்கும் பரிவர்த்தனை செய்யலாம். இது கிராம, ஊரக பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு பேருதவி செய்யும்" என்று தெரிவித்தார்.