பயந்துபோன சீனா..! சீனப் படைகள் 2 கிமீ தூரத்திற்கு பின்நோக்கி சென்று விட்டன..! மத்திய அரசு மூத்த அதிகாரி தகவல்.!



Chinese army went back 2km in border

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி இரவு இந்தியா - சீனா ராணு வீரர்கள் இடையே நடந்த திடீர் தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதேநேரம் 40 சீன ராணுவ வீரர்களும் மரணமடைந்ததாக கூறப்பட்டது.

ஆனால் சீன வீரர்களின் மரணம் மற்றும் இறப்பு எண்ணிக்கை குறித்து சீன அரசு இதுவரை வாய்திறக்கவில்லை. இந்த தாக்குதலை சீன அரசு திட்டமிட்டு நடத்தியதாகவும், இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சீன அரசுதான் காரணம் எனவும் இந்தியா கூறியது. இதனை அடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையே எல்லையில் போர்ப்பதற்றம் நிலவியது.

India china

தற்போது இந்தியா - சீனா இடையே தாக்குதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன ராணுவம் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு பின்னோக்கி சென்றுவிட்டதாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு தரப்பிலும் எல்லையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டுமான அமைப்புகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.