மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கையா முடக்குறீங்க..! ட்விட்டர் லோகோ குருவியை வறுத்து ட்விட்டர் நிறுவனத்திற்கு பார்சல்.! ஷாக் வீடியோ.!
டெல்லியில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி, அந்த சந்திப்பின்போது எடுத்து கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டார். போக்சோ சட்டப்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படமோ, பெற்றோர், குடும்பதினரின் புகைப்படமோ சமூகவலைதளங்கள் அல்லது பத்திரிக்கைகளில் வெளியிட கூடாது.
இந்தநிலையில், ராகுல்காந்தியின் ட்விட்டர் பதிவு தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் கொடுத்த புகாரின் பேரில், ராகுல் காந்தி பதிவிட்ட ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டது. மேலும், ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை முடக்கிவிட்டு ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. அதே போல் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன.
#WATCH | Andhra Pradesh: GV Sri Raj, a Congress leader & son of former MP, GV Harsha Kumar, cooks "Twitter dish" and says he is sending it to the Headquarters of Twitter India, in protest against the action taken by the social media platform against Rahul Gandhi's account. pic.twitter.com/1vB3gRisKG
— ANI (@ANI) August 17, 2021
இதனையடுத்து ராகுல் காந்தி உள்பட பல்வேறு காங்கிரஸ் தலைவர்களின் முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு சுமார் ஒருவார காலத்துக்கு பின்னர் மீண்டும் செயல்பாட்டு வந்தது. ஆனால், காங்கிரஸ் இன்றளவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், ட்விட்டரின் லோலோவில் உள்ள குருவியை எண்ணெயில் பொரியல் செய்து அதை ட்விட்டர் தலைமையகத்துக்கு அனுப்பியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.