திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கொரோனா 3.0 வருமா? வராதா? உருமாறிய புதிய டெல்டா பிளஸ்!! முழு தகவல் இதோ...
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா இரண்டாவது அலை பெருமளவில் பரவி கோரதாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.
இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலைக்கு காரணமான டெல்டா வகை கொரோனா வைரஸ் உருமாறி தற்போது புதிய டெல்டா பிளஸ் வகை வைரஸாக மாறியுள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸின் பாதிப்பு 2வது அலையை ஒத்திருக்கும் எனவும், இந்தியாவில் மிகவும் சிலரே இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கொரோனா 3ம் அலை வரும் என்பது உறுதிப்படுத்தப்படாத தகவல். எந்த புதிய வைரஸாக இருந்தாலும் அதை ஆராய்ந்து சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது என தெரிவித்துள்ளார் .