குப்பை வண்டியில் கொரோனா நோயாளிகள்.. ஆந்திராவில் அரங்கேறிய அவலத்தின் வீடியோ!



Corono patients taken in garbage vehicle at andra

ஆந்திர மாநிலம் வைசியாநகரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகளை மாநகராட்சி குப்பை வண்டியில் ஏற்றி செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. ஆந்திர அரசின் இத்தகைய அலட்சியத்தை பலரும் கண்டித்துள்ளனர்.

அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, கொரோனாவை தாண்டி அவர்களுக்கு வேறு ஏதாவது நோய் வந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாகவும் அவர்களை மனிதர்களாக மதிக்க தவறியது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த வீடியோவில் அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் இரண்டு ஆண்கள் என மூன்று பேர் மாநகராட்சி குப்பை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். பாதுகாப்பு உடை அணிந்த உழியர் ஒருவர் வண்டியை ஓட்டுநராக செயல்படுகிறார்.

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள மாநகராட்சி நிர்வாகம் இது எந்தவித முன்னறிவிப்புமின்றி எதேச்சையாக நடந்த சம்பவம். நோயாளிகளை உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அந்த ஊரை சேர்ந்தவர்களே வழியில் சென்ற மாநகராட்சி குப்பை வண்டியை மறித்து நோயாளிகளை ஏற்றி அனுப்பியுள்ளனர் என கூறியுள்ளது.