#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மகனின் தேர்வுக்காக 105 கி.மீ. சைக்கிளில் அழைத்துச் சென்ற தந்தை! நெகிழ்ச்சி சம்பவம்!
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம் பைதிபுரா கிராமத்தை சேர்ந்தவர் தினக்கூலி தொழிலாளி சோபாராம். அவருடைய மூத்த மகன் ஆஷிஷ். சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய அவர் மூன்று பாடங்களில் தோல்வியடைந்தார். அடுத்த முயற்சியாக ரூக் ஜனா நாகின் என்ற கல்வித் திட்டத்தின் மூலம் மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பித்தார்.
ஆனால் இவருக்கு அவரது கிராமத்தில் இருந்து 105 கிமீ தொலைவில் உள்ள தேர்வு மையமே ஒதுக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கின் காரணமாக அவருக்கு போக்குவரத்து வசதிகளும் எதுவும் இல்லை. இதையடுத்து வறுமையில் சிரமப்படும் தந்தை ஷோபாராம் அவ்வளவு தொலைவில் உள்ள குறிப்பிட்ட தேர்வு மையத்திற்கு மகனை சைக்கிளிலேயே அழைத்துச் செல்வதென்று முடிவெடுத்தார்.
இதனையடுத்து தந்தையும் மகனும் கடந்த திங்களன்று மாலையில் சைக்கிள் பயணத்தைத் தொடங்கினர். இரவில் மட்டும் கோயில்கள் போன்ற இடங்களில் இருவரும் தங்கிக்கொண்டார்கள். இந்தநிலையில் கடந்த செவ்வாயன்று தேர்வு முடித்துவிட்டு வெளியே வந்த மாணவர் ஆஷிஷ்-க்கு ஆச்சரியம் காத்திருந்தது. தந்தையையும் மகனையும் வரவேற்க அரசு அதிகாரிகள் காத்திருந்தனர். பின்னர் இருவருக்கும் உணவிட்டு ஊருக்குச் செல்லவும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தினர். மகனின் கல்விக்காக இத்தனை தீவிரத்துடன் செயல்பட்ட அந்த தந்தை குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.