மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigNews: டெல்லி கலவரத்தில் கைதான முக்கிய குற்றவாளி, புஷ்பா ஸ்டைலில் தெனாவட்டு பாவனை.. பேரதிர்ச்சி வீடியோ வைரல்.!
ஜஹாங்கிர்புரி கலவரத்தில் குற்றவாளி அன்சார் புஷ்பா பட பாணியில் செய்தியாளர்கள் முன் தாடியை வருடிவிட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது.
டெல்லி மாநிலத்தில் உள்ள ஜஹாங்கிர்புரியில் நேற்று நடந்த ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது முஸ்லீம் மதத்தை சேர்ந்த சில இளைஞர்கள் கற்கள் வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் கலவரம் உருவானது. இந்த கலவர சூழலை கட்டுப்படுத்த கூடுதல் காவல் துறையினர் மற்றும் கலவரத்தை கட்டுப்படுத்தும் சிறப்புப்படை நிகழ்விடத்தில் குவிக்கப்பட்டது.
கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்த அதிகாரிகள், தாக்குதலில் ஈடுபட்ட எதிர்தரப்பை சேர்ந்த 20 பேரை அதிரடியாக கைது செய்தனர். இதில், அஸ்லாம் மற்றும் அன்சார் என்ற இரண்டு இளைஞர்கள் தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செய்யப்பட்டதும் அம்பலமானது. இதில், முக்கிய குற்றவாளிகள் 2 பேருக்கு காவல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
#WATCH | Accused in Jahangirpuri violence case being taken to Rohini court pic.twitter.com/UZZPobYZ4n
— ANI (@ANI) April 17, 2022
மீதமுள்ள 18 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களிடம் இருந்து 3 கைதுப்பாக்கிகள், 5 வாள்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முன்னதாக, முக்கிய குற்றவாளியான அன்சார் நீதிமன்றத்திற்கு அழைத்து சொல்லப்படும்போது, புஷ்பா படத்தில் நாயகன் தாடியை வருடுவது போல செய்தியாளர்கள் முன்னிலையில் பாவனை செய்து சென்றது குறிப்பிடத்தக்கது. அன்சாரியின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.