3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
தம் அடிப்பதை கண்டித்தும் கேட்காததால் சிறுவன் கழுத்தறுத்து கொலை.. 17 வயது சிறுவன் பரபரப்பு செயல்.!
சிகிரெட் பிடித்தபோது ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
இன்றளவில் இந்தியாவின் எதிர்கால தூண்கள் என்று கருதப்படும் இளம் சிறார்கள் தங்களின் வாழ்க்கையை பல்வேறு வகைகளில் இழந்து வருகின்றனர். திரைப்படத்தில் தனது ரீல் நாயகன் வாயில் கொள்ளிக்கட்டையை வைத்து இழுத்து உடல் நலத்தை கெடுப்பதை மாஸாக எண்ணி, இவர்களும் அதனை பின்பற்ற தொடங்கியுள்ளனர். இதனால் புற்றுநோய் ஏற்பட்டு, உயிரிழப்பு நிகழும் என்ற அபாயத்தை விளக்கியும், கொள்ளிக்கட்டை குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
டெல்லி மாநிலத்தில் உள்ள வடமேற்கு டெல்லி, மங்கோல்புரி - ரோகினி செக்டர் 1-இல் 17 வயதுடைய சிறுவன் வசித்து வருகிறார். இதே பகுதியில், செக்டர் 2-இல் மற்றொரு 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். சம்பவத்தன்று, செக்டர் 1-ஐ சேர்ந்த சிறுவன், செக்டர் 2-ஐ சேர்ந்த சிறுவனின் வீட்டருகே சிகிரெட் புகைத்துள்ளான்.
இதனைக்கண்ட சிறுவன் இங்கு சிகிரெட் புகைக்க கூடாது. வேறு எங்கேனும் செல் என்று தெரிவித்துள்ளான். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த சிறுவன், இங்குதான் சிகிரெட் பிடிப்பேன் என ஆணவமாக தெரிவித்துள்ளான். இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதமானது இருவருக்குள்ளும் கைலப்பாக மாறவே, இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற செக்டர் 2 சிறுவன், புகை பிடித்தவனை கழுத்தறுத்து கொலை செய்துள்ளான். பின்னர், இறந்த சிறுவனின் உடலை சாக்குப்பையில் போட்டு சாலையோரம் வீசி வந்துள்ளான்.
இந்த சம்பவத்தை கண்டு பதறிப்போன பொதுமக்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, கொலை செய்த சிறுவனை கைது செய்துள்ளனர்.
"புகை பழக்கம் உடல் நலனை கெடுக்கும், உயிரை குடிக்கும். புற்றுநோயை ஏற்படுத்தும்".