பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
87 வயது மூதாட்டி கதறக்கதற பாலியல் பலாத்காரம்.. நள்ளிரவில் வீடு புகுந்து துணிகரம்..!
வீட்டில் தனியே இருந்த 87 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பகீர் சம்பவம் நடந்துள்ளது.
டெல்லியில் உள்ள மேற்கு டெல்லி, திலக் நகரில் 87 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவருடன் அவரது 65 வயது மகள் வசித்து வருகிறார். முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மூதாட்டி வீட்டில் படுக்கையில் ஓய்வெடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மூதாட்டியின் மகள் தனது தோழியை பார்க்க வெளியே சென்றுவிட, வீட்டில் மூதாட்டி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து, மூதாட்டியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அங்கிருந்த செல்போனையும் பறித்து தப்பியோடிய நிலையில், வீட்டிற்கு திரும்பிய மூதாட்டி மகள் தாய் காயத்துடன் கீழே விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், அவரிடம் விசாரணை செய்கையில், நடந்த கொடூரம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இதுகுறித்து டெல்லி மேற்கு காவல் துறையினரிடம் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மர்ம நபருக்கு வலைவீசப்பட்டுள்ளது.