குடிபோதையில் பள்ளிக்கு வந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்.! மாணவிகளை அறைக்குள் பூட்டி கட்டாயப்படுத்தி நடனம்.!



Dismissal of school head master who danced with students under the influence of alcohol

மத்திய பிரதேச மாநிலத்தில் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவிகளை கட்டாயப்படுத்திய தன்னுடன் நடனமாட வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் மத்தியாடோ என்னும் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிபவர் ராஜேஷ் முண்டா. இவர் கடந்த 29ம் தேதியன்று மது அருந்து விட்டு பள்ளிக்கு சென்றதாக கூறப்படுகிறது. 

பள்ளியில் ஒரு வகுப்பில் இருந்த மாணவிகள் சிலரை அழைத்து சென்ற அவர், பள்ளியில் உள்ள அறைக்குள் மூடி வைத்து தன்னுடன் நடனமாட வற்புறுத்தியுள்ளார். அவர்களை நடனம் ஆடும்படி சொல்லி மாணவிகளோடு சேர்ந்து தலைமை ஆசிரியர் ராஜேஷ் முண்டாவும் நடனமாடியுள்ளார்.

மேலும், அங்கு நடந்த சம்பவத்தை வீடியோவும் எடுத்துள்ளார். பின்னார்  பள்ளி முடிந்து வீடுகளுக்குச் சென்ற மாணவிகள் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.