#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தாத்தாவின் வேட்டியில் ராக்கெட் விட்ட இளைஞர்; இது தீபாவளி பரிதாபங்கள்.. வைரல் வீடியோ உள்ளே.!
2024 ம் ஆண்டின் தீபாவளி பண்டிகை அக்.31 & நவ.1 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் சிறப்பிக்கப்பட்டது. நேற்றும், இன்றும் பட்டாசுகள் வெடித்து மக்கள் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இதனால் பல முக்கிய நகரங்களில் காற்று மாசும் ஏற்பட்டு இருக்கிறது.
களைகட்டிய தீபாவளி கொண்டாட்டங்கள்
தமிழகத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசூரன் என்ற அரக்கனை வாதம் செய்ததன் நிறைவாகவும், வடமாநிலங்களில் வனவாசம் முடிந்து பகவான் ஸ்ரீ ராமர் அயோத்தி திரும்பிய நாளாகவும் தீபாவளி சிறப்பிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: வெங்காய வெடிகள் வெடித்து இளைஞர் பீஸ்., பீஸாக சிதறி மரணம்; தீபாவளியன்று பயங்கரம்.!
இந்த நாளில் காலை எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உறுதி, பட்டாசு வெடித்து, இனிப்பு-காரம் பகிர்ந்து பலரும் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனிடையே, பட்டாசு வெடிப்பின்போது சில விபத்துகளும் ஒருசில இடங்களில் நேர்ந்தது.
Late night diwali kalesh
— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 31, 2024
pic.twitter.com/cUmsDDTpBV
இந்நிலையில், பீகாரில் எடுக்கப்பட்டதாக தெரியவரும் வீடியோ ஒன்றில், இளைஞர் ஒருவர் தரையில் வைத்தபடி ராக்கெட்டை கொளுத்துகிறார். அப்போது, முதியவர் எதிர்பாராத விதமாக சாலைக்கு வர, அவரின் வேட்டியில் சிக்கி ராக்கெட் வெடித்தது.
இந்த சம்பவம் எதிர்பாராத விதமாக அவரின் வீடியோவில் பதிவாகிவிட, தற்போது அந்த வீடியோ வைரலாகி உள்ளது. இளைஞரின் செயலுக்கு கண்டனமும், தீபாவளி பரிதாபங்கள் என கலாய்களும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: விடுதிக்குள் தீபாவளி பட்டாசுகளை ஏவி போர்; அதகளம் செய்த மாணவர்கள்.!