மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எட்டாம் வகுப்பு மாணவியை... பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்..!
பீகாரில், சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நான்கு சிறுவர்களிடம் இருந்து காப்பாற்றிய தலைமையாசிரியர், அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக கிராமத்தின் மலைப் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த நான்கு சிறுவர்கள் மாணவியை சுற்றிவளைத்து. அங்கிருந்து மறைவான இடத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர்.
அங்கு வைத்து அந்த மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர். அப்போது மாணவி சத்தம் போட்டதால் அந்த வழியாக சென்ற கிராம பள்ளியின் தலைமை ஆசிரியர் அங்கு வந்தார். தலைமை ஆசிரியரை பார்த்த நான்கு சிறுவர்களும் அங்கிருந்து ஓடிவிட்டனர். அதன்பிறகு அந்த மாணவியை அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியர், பின்னர் அந்த மாணவியை மறைவான இடத்திற்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதனால், மனமுடைந்த நிலையில் வீட்டிற்கு வந்த அந்த மாணவி, நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறினார். மாணவியின் பெற்றோர் கைமூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த நான்கு சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் மீது 376 டிஏ, போக்சோ சட்டம் மற்றும் எஸ்சி.எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு சிறுவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று கூறினர்.