#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒரு ஊருக்கே ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த எலக்ரீஷியன்; மொட்டை அடித்து முறை செய்த கிராம மக்கள்!..
தன் காதலியை தனிமையில் சந்திப்பதற்காக ஒரு கிராமத்தையே இருளில் மூழ்கடித்த எலக்ட்ரீசியன் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களாக மின் பற்றாக்குறையால் நாட்டில் பல இடங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய சம்பவம் ஒன்று பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்திலுள்ள கணேஷ்பூர் என்ற கிராமத்தில் நடந்துள்ளது.
ஏற்கனவே கொளுத்தும் வெயிலில் பல மணி நேர மின்வெட்டால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பீகாரில் ஒரு கிராமத்தில் மட்டும் சில மாதங்களாக தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வந்துள்ளது. சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்படாத நிலையில் தங்கள் கிராமத்தில் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் கிராம மக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இதனால் அங்குள்ள மின்சாரத் துறை அதிகாரிகளிடம் விசாரித்துள்ளனர். அப்பொழுது மின் தடை ஏற்படுவது ஒரு தனி நபரால் என்ற அதிர்ச்சியான விஷயம் தெரியவந்துள்ளது. மேலும், அந்தப் பகுதியில் உள்ள எலக்ட்ரீசியன் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவர், தன் காதலியை சந்திப்பதற்காக கிராமம் முழுவதையும் இருட்டில் மூழ்கடித்துள்ளார், என்ற செய்தி கிராம மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தன் காதலியை தனிமையில் சந்திப்பதற்காக யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கிராமம் முழுவதும் உள்ள கரண்டை துண்டித்துள்ளார். இதை அறிந்த கிராம மக்கள் அந்த இளைஞரையும் அவரது காதலியும், திட்டமிட்டு கையும் களவுமாக பிடித்துள்ளனர். மேலும் அந்த எலக்ட்ரீசியனை கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து அடித்து உதைத்தது மட்டுமல்லாமல் மொட்டை அடித்து தெருக்களில் நடமாட விட்டுள்ளனர்.
இறுதியில் காதலர்கள் இருவருக்கும் கிராம மக்களே முன்னின்று திருமணம் நடத்தி வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.