மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீட்டில் ஒருவர் உயிரிழப்பு.... சடலத்தின் அருகே நின்று சிரித்த முகத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட குடும்பத்தினர்கள்..!
என்னதான் குடும்பத்தினருக்கு பிடிக்கதவராக இருந்தாலும், அந்த நபர் உயிரிழந்தால் குடும்பத்தினர் சோகத்துடன் தான் இருப்பார்கள். ஆனால் கேரளாவில் ஒரு குடும்பத்தில், இறந்துபோன மூதாட்டியின் உடல் வைக்கப்பட்ட பெட்டியுடன் சிரித்த முகத்துடன் குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துகொண்டுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மல்லப்பள்ளியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் 95 வயது மூதாட்டி மரியம்மா வர்கீஸ் என்பவர் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். இவருக்கு 9 குழந்தைகள், 19 பேரக்குழந்தைகள் என அனைவரும் உலகின் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்களில் பலர், மூதாட்டியின் உயிரிழப்பு தகவல் கேட்டு கேரளா வந்துள்ளனர்.
மூதாட்டி இறந்ததும் மத வழக்கப்படி முறையாக இறுதிச்சடங்கு செய்தவர்கள், அதற்கு முன் அவரது உடல் வைக்கப்பட்ட கண்ணாடி பெட்டியுடன் சிரித்த முகத்துடன் குடும்பத்தாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த படம் சமூக இணையத்தில் வைரலாகி பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.