திருநங்கை என தெரிந்ததும் வீட்டிலேயே கொடுமை! பல வலிகள், வேதனைகள்! இறுதியில் படைத்த சாதனை!



first transgender pilot


இயற்கையின் தவறால் சமுதாயத்தின் அறியாமையால், குடுப்பதர்களால் கூட ஒதுக்கப்பட்டு, வாழ்ந்து உயர போராடும், படைப்புகளே திருநங்கைகள் மற்றும் திரு நம்பிகள். இந்தநிலையில் கேரளாவை சேர்ந்தவர் ஆடம் ஹாரி. 20 வயது நிறமொய்ய இவர் திருநம்பி என்பதை உணர்ந்த நிலையில் அவர் குடும்பத்தாருக்கு அது தெரிந்ததும் வீட்டிலிருந்து ஒதுக்கியுள்ளனர். ஆனாலும் பல்வேறு இன்னல்களுக்கு நடுவில் பள்ளிப்படிப்பை தொடர்ந்துள்ளார்.

இளம்வயதிலேயே அவர் கனவு கண்ட விமான ஓட்டி ஆகவேண்டும் என்பது தான். ஆனால் இந்த வாய்ப்பு இனி கிடைக்காது என்று மனமுடைந்து இருந்தநிலையில் ஆடம் ஹாரிக்கு நிதி உதவ முன்வந்தது கேரள அரசின் சமூக நீதித்துறை. 

Transgender

ஆடம் ஹாரியின் விமான ஓட்டி பயிற்சிக்குத் தேவையான 23.34 லட்சம் ரூபாய் நிதி உதவியையும் கேரள மாநில சமூகநலத்துறை அளித்தது. ஆனாலும் விமான ஒட்டியாகத் தேவையான தகுதிக்கு குறைபாடுகள், அவருக்கு பெரும் சவாலாக இருந்தன.

இந்தநிலையில் அவருக்கு 200 மணிநேர பயிற்சி அடைவது உள்ளிட்ட, எல்லா தடைகளையும் தாண்ட அரசு அவருக்கு உதவியது. இந்தநிலையில் திருவனந்தபுரம், ராஜீவ் காந்தி விமான ஓட்டி பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்து அவர் வணிக ரீதியிலான விமான ஓட்டுநர் உரிமத்தை பெற்றுள்ளார். இதனையடுத்து பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்தியாவின் முதல் திருநம்பி விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.