மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாம்பின் தலையில் புதுவித ஒளி!. அதிர்ச்சியடைந்த விவசாயி!.
கர்நாடகா மாநிலம் ஹலேமக்கி கிராமத்தை சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் நேற்று காலையில் நாய் குரைத்து கொண்டிருந்தது.
நீண்ட நேரம் நாய் குறைத்ததால் அப்பகுதிக்கு சென்று அவினாஷ் பார்த்துபோது, நாகபாம்பு ஒன்று நாய் முன் படம் எடுத்தபடி நின்றது. மேலும் பாம்பின் பின்புறத்தில் நெருப்புபோல் சிவப்பு வர்ணம் தெரிந்தது.
அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவினாஷ் அந்த காட்சியை தனது செல்போனில் வீடியோ, மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவினாஷ் கூறும்போது,நாய் குரைப்பதை கேட்டு தோட்டத்திற்கு சென்றபோது பாம்பு ஒன்று படமெடுத்து நிற்பதையும், அதன் பின்புறத்தில் சிவப்பு நிற ஒளிபோன்று காட்சி அளிப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
இதை மற்றவர்களுக்கு காட்டுவதற்காக உடனடியாக செல்போனில் படம் பிடித்தேன். சில நிமிடங்களுக்கு பின்னர் அங்கிருந்த புதருக்குள் பாம்பு சென்றுவிட்டது.என கூறினார்.