மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொதுமக்களே உஷார்.! நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.!
கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் பங்கு விலக்கல் திட்டத்தில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்தார். மத்திய அரசின் இந்த முயற்சிக்கு பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்தநிலையில், வங்கி ஊழியர்சங்கங்கள் இணைந்து மார்ச்15, 16 ஆகிய இரண்டு நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாளை 13.03.2021அதாவது இரண்டாம் சனிக்கிழமை என்பதால் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு விடுமுறை உள்ளன.
எனவே நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என கூறப்படுகிறது. இதனால் செக் கிளியரன்ஸ் உள்ளிட்ட பல வங்கிப் பணிகள் பாதிக்கப்படலாம் என அச்சம் எழுந்துள்ளது. தனியார் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக வங்கிகள் இயங்காது என்பதால் இன்றே வங்கிகள் சம்பந்தமான அனைத்து பணிகளையும் முடித்து கொள்ள வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.