மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
16 வயது சிறுமியின் வாயில் எரியும் கட்டையை திணித்து... ஆசிரமத்தில் கதறக்கதற நடந்த கொடூரம்.. பயங்கர அதிர்ச்சி.!
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய காலத்திலும், குழந்தைகளின் மனநிலையை அறியாமல் மாந்திரீகம் பக்கம் செல்வோருக்கு கீழ்காணும் செய்தி ஓர் எச்சரிக்கை பாடம்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மாசா மாவட்டம், பாதேரா கிராமத்தில் ஜெய் குரு தேவ் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்திற்கு 13 வயது சிறுமிக்கு பேய்பிடித்து இருக்கிறது, அதனை விரட்ட வேண்டும் என அழைத்து வரப்பட்டுள்ளார்.
சிறுமியின் குடும்பத்தினர் அவரை அழைத்து சென்ற நிலையில், அங்கு ஆசிரம நிர்வாகிகள் சிறுமியை 3 பேராக சேர்ந்து கடுமையாக அடித்து துன்புருத்தி இருக்கின்றனர். மேலும், எரியும் மரக்கட்டையை சிறுமியின் வாயில் திணித்து கொடுமை செய்துள்ளனர்.
இதனால் பலத்த காயமடைந்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, இந்த தகவலை அறிந்த சிறுமியின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை துன்புறுத்திய 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆசிரமத்தை நடத்த அனுமதி இருந்ததா? என மேற்படி விசாரணை நடந்து வருகிறது.