நடத்தையில் சந்தேகம், வரதட்சணை கொடுமை.. புதுமணப்பெண்ணை துன்புறுத்திய ஆப் டெவலப்பர் குடும்பம்.!



Girl tortured and locked in house by her husband

தான் விரும்பி திருமணம் செய்த தோழியான மனைவியின் மீது சந்தேகம் கொண்டதோடு மட்டுமல்லாமல், குடும்பத்தோடு சேர்ந்து வரதட்சணை கொடுமை செய்த கணவன் உட்பட 5 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர், கூடப்பாக்கம் தர்மாபுரி பகுதியில் வசித்து வருபவர் ரவிசங்கர் (வயது 30). சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் ஐ.டி நிறுவனத்தில் ஆப் டெவலப்பராக பணியாற்றுகிறார். கடந்த 2022 செப்டம்பர் மாதம் லாஸ்பேட்டை பகுதியில் வசித்து வரும் பிரியங்கா (வந்து 28) என்ற பெண்ணை திருமணம் செய்தார். 

இருவரும் ஐ.டி நிறுவனத்தில் ஒன்றாக பணியாற்றி வந்ததாக கூறப்படும் நிலையில், இருவரின் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது மணமகள் வீட்டார் சார்பில் 25 சவரன் நகைகள், ரூ.4 இலட்சம் மதிப்பிலான சீர்வரிசை, கார் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளன.

திருமணத்திற்கு பின்னர் கணவரோடு பிரியங்கா இருந்து வந்த நிலையில், அவரின் மாமியார் ஜெயந்தி - மாமனார் பார்த்தசாரதி சேர்ந்து மருமகளை எப்போதும் திட்டி, அடித்து வந்ததாக தெரியவருகிறது. அதுமட்டுமல்லாது ரவிசங்கர் தனது மனைவி பிரியங்கா வேலை நிமித்தமாக பேசியதை தவறாக புரிந்துகொண்டு தகராறு செய்துள்ளார். 

இந்தியா

இதனால் பிரியங்காவுக்கு எதிராக அவரது கணவர் வீட்டார் பல கொடுமைகள் செய்துள்ளனர். கூடுதல் வரதட்சணை கேட்டு அவரின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் பிரியங்காவை சித்ரவதைக்குள்ளாக்கியுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக பிரியங்கா வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, புகாரை ஏற்ற காவல் துறையினர் ரவிசங்கர், ஜெயந்தி, பார்த்தசாரதி, ரவிசங்கரின் அண்ணன் ராஜசேகர், அக்கா பாரதி, பாரதியின் கணவர் ரமேஷ் ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.