மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திரிணாமுல் காங்கிரசில் இணைந்த மாநில காங்கிரஸ் தலைவர்.. வலுப்பெறும் சக்தியாக மம்தா பானர்ஜி?.!
கோவா மாநில காங்கிரஸ் தலைவர் ராக்கி தன்னை திரிணாமுல் காங்கிரசில் இணைத்துக்கொண்டார்.
இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக உருவாகியுள்ள பாரதிய ஜனதா கட்சி, தொடர்ந்து 2 ஆவது முறையாக பாராளுமன்றத்தை தொடர்ந்து அலங்கரித்திருக்கிறது. இதனால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் எதிர்வரும் தேர்தலிலாவது இந்திய ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்க வேண்டும் என்று செயலாற்றி வருகிறது.
காங்கிரசில் இருந்து பிரிந்து திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சியை மேற்கு வங்கத்தில் தோற்றுவித்த மம்தா பானர்ஜி, அங்கு 3 ஆவது முறையாக தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துள்ளார். மேலும், இந்திய அளவில் பாஜகவுக்கு எதிர்க்கட்சியாக காங்கிரஸ் தோற்றமளித்து வந்த நிலையில், அந்த பிம்பம் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் பக்கம் திரும்பியுள்ளது.
இதனால் பலரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவி வரும் நிலையில், வெளிமாநிலத்தை சார்ந்த பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்களும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளனர். மாநில அளவில் வலுப்பெற்று இருக்கும் பல்வேறு இடதுசாரி கட்சிகளும், மம்தா பானர்ஜிக்கு முக்கியத்துவம் வழங்க தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், நேற்று கோவா மாநில காங்கிரஸ் தலைவர் ராக்கி பிரபு தேசாய் நாயக் தன்னை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். இதனால் கோவா மாநில காங்கிரசில் விரிசல் ஏற்பட்டுள்ளது.