"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
பாலியல் புகாரில் சிக்கிய அமைச்சர் ராஜினாமா.. விசாரணை நடத்த உத்தரவு?.!
செக்ஸுவல் ஸ்கேன்டல் எனப்படும் சிறுமிகளை பாலியல் தொழிலாளர்களாக விற்பனை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் சிக்கிய கோவா நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர், பாஜக சட்டமன்ற உறுப்பினர் மிலிந்த் நாயக் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.
தெற்கு கோவாவில் இருக்கும் முர்முகாவ் சட்டமன்ற தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ மிலிந்த் நாயக். இவர் முந்தைய முதல்வர் மனோஜ் பாரிக்கர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த நிலையில், பிரமோத் சாவந்த் தலைமையிலான அமைச்சரவையில் நகர்ப்புற மேம்பட்டு துறை அமைச்சராக இருக்கிறார்.
காங்கிரஸ் கோவா தலைவர் கிரிஷ் சேடாங்கர், அமைச்சர் மிலிந்த் நாயக் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சிறுமிகளை வணிகரீதியாக விற்பனை செய்ய உறுதுணையாக இருந்து பாலியல் சுரண்டலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும், அமைச்சரை பதவி நீக்கம் செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கவே, அதுதொடர்பான குற்றசாட்டுகள் கோவா அரசியல் களத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதனால் அமைச்சர் மிலிந்த் நாயக் தனது அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ள அம்மாநில முதல்வர், அதனை ஆளுநரின் கவனத்திற்கும் அனுப்பி வைத்துள்ளார். மேலும், உரிய முறையில் விசாரணை நடக்க ஒத்துழைப்பை தரும் பொருட்டு, மிலிந்த் நாயக் தனது அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.