ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
திருமணம் முடிந்த சில நிமிடங்களில், திருமண மேடையிலேயே உயிரிழந்த மணமகன்..! கதறித் துடித்த மணமகள்.!

திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மனமேடையிலையே மணமகன் மயங்கி விழுந்து உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் கணேஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்வப்னா என்ற பெண்ணிற்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இருவருக்கும் திருமணம் முடிந்து இசை கச்சேரியுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இசை கச்சேரியில் கலந்துகொண்ட புது மாப்பிள்ளையும் பாடல்களுக்கு நடனம் ஆடி மகிழ்ச்சியாக இருந்துள்ளார். இந்நிலையில் இசை கச்சேரியின் சத்தம் அதிகமாகவே நெஞ்சை பிடித்துக்கொண்டு மாப்பிளை திடீரென கீழே விழுந்து மயங்கியுள்ளார்.
உடனே அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். ஆனால், மாரடைப்பு காரணமாக கணேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியது அங்கிருந்த அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மணமகனின் பரிதாப மரணம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.