#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இனி நகைகளில் ஹால்மார்க் முத்திரை கட்டாயம்; ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது... மத்திய அரசு உத்தரவு..!
தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்ய, ஹால்மார்க் முத்திரை பயன்படுத்தப்படுகிறது.
ஹால்மார்க் முத்திரை என்பது தனித்துவமிக்க ஆறு இலக்க எண் ஒவ்வொரு நகை மீதும் பொறிக்கப்படுகிறது. இந்த எண் மூலம் அந்த நகையை உருவாக்கிய நிறுவனம் மற்றும் ஹார்ல்மார்க் முத்திரை அளித்த மையம் எது என்பதை கண்டறியலாம்.
நாடு முழுவதும் 940 ஹால்மார்க் முத்திரை அளிக்கும் மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. மத்திய அரசு சிறு, குறு நகை நிறுவனங்களின் தயாரிக்கும் நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பெறுவதற்கு ஆகும் கட்டணத்தில் 80 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.