மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அங்குமிங்கும் சுழன்று, துள்ளி குதித்து தரையிறங்கிய ஹெலிகாப்டர்.! பதறவைக்கும் ஷாக் வீடியோ.!
உத்திராகண்ட் கேதார்நாத் தாமில் ஹெலிகாப்டர் ஒன்று சுழன்று குதித்தவாறு ஆபத்தான முறையில் தரையிறங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் தனியார் நிறுவன ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்க வந்துள்ளது. ஆனால் அப்பொழுது திடீரென ஹெலிகாப்டர், விமானியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. மேலும் அதனால் தரையிறங்க முடியாமல் வானிலேயே அங்குமிங்கும் சென்று சுழன்றுள்ளது.
பின்னர் ஒரு வழியாக விமானி வேகமாக ஹெலிகாப்டரை தரையிறக்கினார். ஆனால் மிகுந்த வேகத்தில் இறங்கியதால் ஹெலிகாப்டர் தரையில் பட்டு மீண்டும் குதித்து சுழன்றுள்ளது. ஆனாலும் விமானி மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு ஹெலிகாப்டரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்.
மேலும் அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டரில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆபத்தான முறையில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதை கண்டு அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓடியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
#WATCH A helicopter belonging to a private aviation company while landing at Kedarnath helipad had an uncontrolled hard landing on 31st May; no passengers were injured in the incident#Uttarakhand pic.twitter.com/4yskr0aoz5
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 6, 2022