மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பப்ளிக் எக்ஸாமில் முதலிடம் பிடித்தால், இலவச ஹெலிகாப்டர் சவாரி.. முதல்வர் அதிரடி அறிவிப்பு.!
பொதுத் தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு, ஹெலிகாப்டர் சவாரி பரிசாக வழங்கப்படும் என சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் மந்திரி பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ராய்ப்பூரிலிருந்து 420 கி.மீ தொலைவில் உள்ள பலராம்பூரில் மக்கள் கலந்துரையாடலில் முதல் மந்திரி பங்கேற்றுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, "பொதுத்தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ஹெலிகாப்டர் சவாரி பரிசாக வழங்கப்படும். அத்துடன் மாவட்டங்களில் முதலிடம் பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் சவாரி காத்திருக்கிறது. குழந்தைகளை நாம் ஊக்குவிக்கவும், உத்வேகம் அளிக்கவும் இதுபோன்ற செயல்களை செய்வதன் மூலமாக அவர்களுக்கு புதிய உற்சாகம் கிடைக்கும்.
மேலும், ஹெலிகாப்டர் பயணம் மூலமாக குழந்தைகள் தங்கள் வாழ்க்கையிலும் பெரிய தன்னம்பிக்கையை பெறுவார்கள். அத்துடன் அவர்களது லட்சியத்தை அவர்களே அடைவதற்காக பல முயற்சிகளை எடுத்து தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்வார்கள்" என்று கூறியிருக்கிறார்.