மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigNews: ரூ.1000 கோடிக்கு போலிக்கணக்கு... முறைகேடில் ஈடுபட்டு வசமாக சிக்கிய Hero MotoCorp..!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.1000 கோடிக்கும் மேலாக செலவு செய்தது என போலியான ஆவணங்களை சமர்ப்பித்து வசமாக சிக்கிக்கொண்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
டெல்லி மாநிலத்தில் உள்ள சத்தர்பூரில் இருக்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், அந்நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் முக்கிய இயக்குனர்கள் வீட்டில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில், பண்ணை வீட்டில் ரூ.100 கோடி ரொக்கப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. மேலும், ரூ.1000 கோடி அளவில் செலவு செய்ததாக போலியான கணக்குகளை தயார் செய்து, அந்நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது.
கடந்த 23 ஆம் தேதி தொடங்கிய சோதனை, தொடர்ச்சியாக 3 நாட்கள் நடைபெற்று மார்ச் 26 ஆம் தேதி நிறைவு பெற்று இருந்தது. 40 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மோசடி அம்பலமாகியுள்ளது.