வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!
ஆணவக் கொலை! பெற்ற பிள்ளையையே கொன்று ஆற்றில் வீசிய பெற்றோர்
ஆணவக் கொலை! வரலாற்றுப் பின்னணியில் அதிகமாக அரங்கேறிய ஒரு கொடூர சம்பவம். தங்களது கௌரவத்திற்காக பெற்ற பிள்ளைகளையே கொலை செய்யும் கொடும் செயல். இந்த காலத்தில் இது போன்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. ஆனால் முற்றிலும் அழியவில்லை.
கடந்த வாரம் இந்த ஆணவக்கொலை மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அரங்கேறியுள்ளது. 16 வயது மகளை பெற்றோர்களே கொலை செய்து கங்கை ஆற்றில் வீசியுள்ளனர்.
மால்டா மாவட்டத்தில் உள்ள மகேந்திரதோலா கிராமத்தில் தீரன் மோன்தால் தனது மனைவி சுமதி மோன்தாலுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகள் இருந்துள்ளார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அந்தப் பெண்ணுக்கும் பக்கத்து ஊரைச் சேர்ந்த ஆச்சிந்தியா மோந்தல் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தப் பையனுடன் தங்களது மகள் பழகுவதை பிடிக்காத பெண்ணின் பெற்றோர் பலமுறை கண்டித்துள்ளனர். ஆனால் அந்தப் பெண் பெற்றோரின் பேச்சை கேட்காததால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் கடந்த வெள்ளிக்கிழமை தங்களது மகளை கொலை செய்து ஒரு கோணிப்பையில் கட்டி உள்ளனர். பின்னர் தூக்கிச் சென்று கங்கை ஆற்றில் வீசிவிட்டனர்.
இளம்பெண் காணாமல் போன தகவல் போலீசாருக்கு தெரிய வரவே அந்தப் பெண்ணின் பெற்றோரை விசாரிக்க துவங்கினர். விசாரணைக்குப்பின் அவர்கள் தங்களது மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களை கைது செய்த போலீசார் ஆட்களைக் கொண்டு பெண்ணின் உடலை ஆற்றில் தேடி வருகின்றனர்.