மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கழிவறைக்குச் சென்ற 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.! 12 வயது சிறுவன் மீது பாய்ந்த போக்சோ சட்டம்.!
மகாராஷ்டிரம் மாநிலத்தில் ஏழு வயது சிறுமியை 12 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அந்த சிறுவனை கைது செய்த காவல்துறை சிறையில் அடைத்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் மாவலில் உள்ள ஜின்னா பரிசுத் பள்ளியில் ஏழு வயது சிறுமி ஒருவர் கல்வி கற்று வருகிறார். கடந்த ஜூன் 26 ஆம் தேதி வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் போது இயற்கை உபாதை கழிப்பதற்காக ஆசிரியரிடம் கூறிவிட்டு கழிவறைக்கு சென்று இருக்கிறார் அந்த மாணவி.
இதனைத் தொடர்ந்து அதே பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுவன் ஒருவன் பெண்கள் கழிவறைக்குச் சென்று மாணவியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான் . இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவி அழுது கொண்டே தனது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்திருக்கின்றனர்.
பள்ளி நிர்வாகம் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகாரளித்தது. அந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்து உண்மையை கண்டறிந்து அந்த 12 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும் அந்த சிறுவனின் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர்.