#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பரிதாப காட்சிகள்!! அமெரிக்க விமான சக்கரத்தில் மனித உடலின் பாகங்கள்!! கண்கலங்கவைக்கும் ஆப்கான் மக்களின் நிலை..
அமெரிக்க போர்விமானத்தின் சக்கரங்களில் மனித உடலின் பாகங்கள் இருந்ததாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டை சேர்ந்த மக்கள் பலர் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல முற்பட்டனர். இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வேத விமானநிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அரசு பேருந்தில் ஏறுவதுபோல் மக்கள் முண்டியடித்து விமானத்தில் ஏறுவதும், ஓடுபாதையில் சென்றுகொட்டிருந்த விமானத்தை நோக்கி மக்கள் கூட்டம் ஓடுவதும்போன்ற காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதறவைத்தன. அதுமட்டும் இல்லாமல், அமெரிக்க விமானத்தின் சக்கரத்தை பிடித்தபடி விமானத்தில் பயணித்த 3 பேர் நடுவானில் இருந்து கீழே விழுந்த காட்சிகளும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மக்களை ஏற்றிக்கொண்டு பறந்த அமெரிக்க விமானம் தரையிறங்கியபோது, விமானத்தின் சக்கரங்களில் மனித உடலின் பாகங்கள் இருந்ததாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.