லட்டு கொடுத்த மனைவி, விவாகரத்து கேட்டு அடம்பிடிக்கும் கணவர்.! ஏன்? என்ன நடந்தது தெரியுமா?
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் வசித்து வரும் தம்பதியினருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், கணவருக்கு சிறுநோய் ஏற்பட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் பெரும் வருத்தத்தில் இருந்த அவரது மனைவி, தாந்திரிகர் ஒருவரை சந்தித்து தனது கணவரின் நிலைகுறித்து கூறி அவரது உடல்நிலை சரியாக ஆலோசனை கேட்டுள்ளார்.
அதற்கு தாந்திரிகர், அந்த பெண்ணிடம் உனது கணவருக்கு காலை மற்றும் இரவு ஆகிய இரு வேளைகளிலும் சாப்பிட லட்டுகளை மட்டுமே கொடுக்கு என அறிவுரை வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண்ணும் தனது கணவருக்கு காலையில் சாப்பிட நான்கு லட்டுகளும் இரவில் சாப்பிட நான்கு லட்டுகளும் மட்டுமே வழங்கியுள்ளார். மேலும் அவருக்கு சாப்பிட எதுவுமே கொடுக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே இதுகுறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அந்த நபர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து தரக் கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மேலும் இதுகுறித்து காரணம் கேட்டநிலையில் அவர் சாப்பிட வெறும் லட்டு மட்டுமே தருகிறார் எனக் கூறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனுவை பார்த்த ஆலோசனை வழங்கும் அதிகாரிகளும் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.